UPFA – 308886 ஆசனம் 18+2
UNP - 250732 ஆசனம் 15
JVP - 9390 ஆசனம் 01
TDNA - 7714 ஆசனம் 01 ம் பெற்றுள்ளன. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கூடுதலான் வாக்குகளைப் பெற்றதால் அவர்களுக்கு மேலும் இரு போனஸ் ஆசனங்கள் வழங்கப்பட்டு உள்ளது.
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 11 ஆசனங்களில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 58 விதமான வாக்குகளைப் பெற்று (105341 வாக்குகள்) 6 ஆசனங்களையும் ஐக்கிய தேசியக் கட்சி 32.3 வீதமான வாக்குகளைப் பெற்று (58602 வாக்குகள்) 4 ஆசனங்களையும் வென்றுள்ளது. தமிழ் ஜனநாயக தேசியக் கூட்டமைப்பு 4.25 வீதமான வாக்குகளைப் பெற்று (7714 வாக்குகள்) ஒரு ஆசனத்தை வென்றுள்ளது.
திருகோணமலை மாவட்டத்தில் 10 ஆசனங்களில் ஐக்கிய தேசியக் கட்சி 51.4 வீதமான வாக்குகளைப் பெற்று (70858 வாக்குகள்) 5 ஆசனங்களையும், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 43 வீதமான வாக்குகளைப் பெற்று (59298 வாக்குகள்) 4 ஆசனங்களையும் ஜேவிபி 3 வீதமான வாக்குகளைப் பெற்று (4266 வாக்குகள்) ஒரு ஆசனத்தையும் வென்றுள்ளது.
அம்பாறை மாவட்டத்தில் 14 ஆசனங்களில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 53 விதமான வாக்குகளைப் பெற்று (147247 வாக்குகள்) 8 ஆசனங்களையும் ஐக்கிய தேசியக் கட்சி 44.5 வீதமான வாக்குகளைப் பெற்று (121272 வாக்குகள்) 6 ஆசனங்களையும் வென்றுள்ளது.
20 வருடங்களுக்கு முன்:
கிழக்கு மாகாண வரலாற்றில் கிழக்கு மாகாணத்துக்கு மாத்திரமென தனியானதோர் மாகாணசபை நடைபெறுவது வரலாற்றில் இதுவே முதற்தடவை. 1988ஆம் ஆண்டில் வடக்கு - கிழக்கு இணைந்த மாகாணசபைக்கான தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் வட மாகாணத்திலிருந்து 36 உறுப்பினர்களும், கிழக்கு மாகாணத்திலிருந்து 35 உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். வடமாகாணத்தில் போட்டியின்றி ஈ.பி.ஆர்.எல்.எவ். 24 உறுப்பினர்களையும், ஈ.என்.டி.எல்.எவ். 12 உறுப்பினர்களையும் பங்கிட்டுக் கொண்டன. இதன் மூலம் இணைந்த வடக்கு - கிழக்கு மாகாணசபையின் ஆட்சியுரிமை தமிழர் பெரும்பான்மைப் பலம்கொண்டதென்பது உறுதியான நிலையில்தான் கிழக்குமாகாணத்தில் அன்று தேர்தல் நடைபெற்றது.
இணைந்த வடக்கு – கிழக்கு மாகாணசபையில் ஈ.பி.ஆர்.எல்.எவ்., ஈ.என்.டி.எல்.எவ் ஆகிய அணிகளின் கூட்டு 55 ஆசனங்களையும், ஐக்கிய தேசியக்கட்சி அம்பாறை மாவட்டத்தில் 1 ஆசனத்தையும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மட்டக்களப்பில் 3, அம்பாறையில் 9, திருமலையில் 05 என மொத்தமாக 17 ஆசனங்களையும் பெற்றிருந்தன. (சிறிலங்கா சுதந்திரக்கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி மற்றும் கட்சிகள் தேர்தலில் போட்டியிடவில்லை.)
அன்று கிழக்கு மாகாணத்தில் 576 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டன. மட்டக்களப்பு மாவட்டத்தில் 79% அம்பாறை மாவட்டத்தில் 55% திருமலை மாவட்டத்தில் 53% வீதமானோர் வாக்களித்திருந்தனர். 1988இல் நடைபெற்ற மாகாணசபைத் தேர்தல் முடிவுகளின்படி வரதராசப் பெருமான் முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்டார். முஸ்லிம் காங்கிரஸ் எதிர்க்கட்சியாக இருந்தது.
மே 10, 2008 தேர்தல் ஒரு பார்வை:
தற்போது இரு தசாப்தங்களுக்கும் பல்லாயிரக் கணக்கான உயிரிழப்புகளிற்குப் பின் மே 10, 2008ல் இடம்பெற்ற கிழக்கு மாகாணத் தேர்தலில் சராசரியாக 60 வீதத்திற்கும் அதிகமானவர்கள் வாக்களித்துள்ளனர். தேர்தல் வன்முறைகள் துஸ்பிரயோகங்கள் இடம்பெற்ற போதும் ஒப்பீட்டளவில் ”இலங்கைத் தேர்தலுக்குரிய ஜனநாயக பண்பு”டன் இடம்பெற்றுள்ளது.
தேர்தல் வாக்களிப்பு பெரும்பாலும் இனரீதியாக அமைந்துள்ளதையே தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. அதன்படி முஸ்லீம்களின் வாக்குகள் சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் - ஐக்கிய தேசியக் கட்சிக் கூட்டிற்கு சென்றுள்ளது. அம்பாறை மாவட்டத்தில் அம்பாறை தேர்தல் தொகுதி, திருகோணமலை மாவட்டத்தில் சேருவில தேர்தல் தொகுதி என்பன முழுமையான சிங்களப் பகுதிகளாகும். இவ்விரண்டு தொகுதிகளிலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றுள்ளது. சிங்கள மக்களின் வாக்குகள் பெரும்பாலும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு சென்றுள்ளது. ஜேவிபியும் சிங்கள மக்களின் வாக்குகளின் ஒரு பகுதியைப் பெற்றுள்ளது. தமிழ் வாக்குகளைப் பொறுத்தவரை திருகோணமலையில் தமிழ் மக்கள் ஐக்கிய தேசியக் கட்சி - சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கூட்டுக்கே வாக்களித்து உள்ளனர்.
மட்டக்களப்பை பொறுத்தவரை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கூட்டில் போட்டியிட்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பு கணிசமான வாக்குகளைப் பெற்றுள்ளது. தமிழ் ஜனநாயகக் தேசியக் கூட்டமைப்பும் தமிழ் மக்களின் வாக்குகளின் ஒரு பகுதியைப் பெற்றுள்ளது.
எதிர்பார்க்கப்பட்டது போலவே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கூட்டுக்கும், ஐக்கிய தேசியக்கட்சி - சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸிற்கும்@ ரிஎம்விபி க்கும் எல்ரிரிஈ க்கும்@ மகிந்த அரசுக்கும் எல்ரிரிஈக்கும் இடையோயான பலப் பரீட்சையாகவே இது இத்தேர்தல் நடந்து முடிந்துள்ளது.
இது கிழக்கு மாகாணம் தனித்துவத்துடன் இயங்க வேண்டும் என்பதற்கு ஆதரவாகவும் கொள்ள முடியும். இத்தனித்துவ நிலைக்கான ஆதரவு திருகோணமலையில் இல்லை என்பதையும் இத்தேர்தல் முடிவுகளில் காணலாம். அதனாலேயே திருகோணமலையில் உள்ள தமிழ் மக்கள் தமது வாக்குகளை ஐக்கிய தேசியக் கட்சிக்கு வழங்கி உள்ளனர்.
கிழக்கின் இவ்வெற்றி மகிந்த ராஜபக்ச அரசைப் பொறுத்தவரை இரட்டிப்பு வெற்றியே. தேர்தல் வெற்றியும் அதனால் கிடைக்கப் போகும் அரசியல் வெற்றியும் மகிந்தவின் அரசியல் ஸ்தீரத்தன்மையை பலப்படுத்தும் எனறே எதிர்பார்க்கப்படுகிறது. இதனை ஒரு ஜனநாயகத்துக்கு கிடைத்திருக்கும் வெற்றியென சர்வதேசத்திற்கு பிரச்சாரப்படுத்துவதில் ஜனாதிபதி மகிந்த சில செக்கன்களும் தாமதிக்கமாட்டார்.
இத்தேர்தலில் அரசுக்கு எதிராகவும் தங்களில் இருந்து பிரிந்து சென்ற கருணா - பிள்ளையான் குழுவுக்கு எதிராகவும் வாக்களிக்கும் படி விடுதலைப் புலிகள் விடுத்த அழைப்பு பெரும்பாலும் மட்டு மக்களால் நிராகரிக்கப்பட்டு உள்ளது. மொத்தமான 11 ஆசனங்களில் அரசுக்கு சார்பான கட்சிகள் 7 ஆசனங்களை வென்றுள்ளன. மேலும் மகிந்த அரசின் ஆளும் கூட்டணியின் வெற்றி அரசியல் ரீதியாக ஒர் மூலைக்குள் முடக்கப்பட்டு இருக்கும் விடுதலைப் புலிகளுக்கு இன்னும் நெருக்குவாரத்தை வழங்க உள்ளது. ஜனாதிபதித் தேர்தலில யூஎன்பி யை தோற்கடிக்க வைத்த விடுதலைப் புலிகளால் ஆண்டுகள் கடந்தும் மாகாண சபைத் தேர்தலில் கூட அத்தவறைத் திருத்திக் கொள்ள முடியவில்லை. அவர்களது வேண்டுகோளுக்கு எதிராக மக்கள் வாக்களித்து உள்ளனர்.
இத்தேர்தல் ஜனநாயக ரீதியாக நடந்ததா? அல்லது அதற்கு விரோதமாக நடந்ததா? என்றால் ஒவ்வொருவரும் தங்கள் அரசியல் நிலைப்பாட்டிற்கு ஏற்ப பதிலளிப்பர். ஆளும் கட்சிக்கு ஆதரவானவர்கள் எதிரானவர்கள், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவானவர்கள் எதிரானவர்கள் என்ற நிலைப்பாட்டில் இருந்தே தேர்தல் ஜனநாயகமாக நடந்ததா இல்லையா என்பதற்குப் பதில் வரும். மட்டக்களப்பு - திருகோணமலை மாவட்ட தேர்தல் முடிவுகள் வந்த நிலையில் இரு கட்சிகளுமே வெற்றி தோல்வியை நிர்ணயிக்க முடியாத நிலையிலேயே இருந்தன. ஆளும் கூட்டணி 10 ஆசனங்களையும் எதிர்க் கட்சிக் கூட்டணி 9 அசனங்களையும் பெற்றிருந்தன. இன்று (மே 11) நண்பகல் அளவில் அம்பாறை மாவட்ட முடிவுகள் வெயிளிடப்பட்டதன் பின்னரே ஆளும் கூட்டணியின் வெற்றி உறுதியானது.
தமிழ் மக்களைப் பொறுத்தவரை இத்தேர்தலில் அவர்கள் பெருமளவில் அக்கறை கொள்ளவில்லை. அதற்கு நியாயமான காரணங்கள் ஏராளம் உள்ளது. முக்கிய காரணம் இத்தேர்தல் அவர்களது வாழ்க்கையில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை. உண்மையில் தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல இலங்கையில் உள்ள எந்த மக்களுக்குமே கடந்த காலங்களில் நடந்த தேர்தல்கள் எந்த மாற்றத்தையும் கொடுக்கவில்லை. ஒவ்வொரு தேர்தலுக்குப் பின்னும் மக்களுடைய வாழ்வியல் நிலை மேலும் மேலும் மோசமடைந்தே சென்றிருக்கிறது. இது இங்கு பிரித்தானியாவுக்கும் பொருந்தும் போது இலங்கை எம்மாத்திரம்.
ஆயினும் தேர்தல்களே குறைந்தபட்ச ஜனநாயகத்தை மக்கள் அனுபவிக்க, தங்கள் அரசியல் நிலைப்பாட்டைத் தெரிவிக்க உள்ள ஒரே பொறிமுறை என்ற வகையில் அதனை நிராகரிக்க முடியாது.
வழமையான தேர்தலின் நச்சுச் சுற்றில் இருந்து இந்தத் தேர்தல் மட்டும் விடுபட்டு சரியான திசையில் செல்லும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் மக்களுக்கு இல்லை. ஒவ்வொரு தடவையும் மக்கள் சந்தர்ப்பங்களை வழங்கி களைத்தப் போய்விட்டார்கள். பிள்ளையார் பிடிக்கப் போய் பிள்ளையான் வந்த கதையாகிப் போச்சு இன்றைய கிழக்கு அரசியல். பிள்ளையான் மீண்டும் முருங்கை மரம் ஏறுவாரா அல்லது மக்களுக்கு தோழர் பிள்ளையாராவார என்பது தெரியவர நீண்ட நாள் காத்திருக்க வேண்டியதில்லை.
மக்களுடைய எதிர்பார்ப்புகள் மிகக் குறைந்த பட்சமாகவே இருந்த போதும் அதனையே அரசு அவர்களுக்கு வழங்க மறுக்கிறது. அம்மக்களுக்கு தலைமையை கொடுக்க முன் வந்தவர்கள் எல்லாம் அம்மக்களின் தலையிலேயே மிளகாய் அரைத்ததால் அரசும் தன் பங்கிற்கு அம்மக்களின் தலையில் மிளகாய் அரைக்கிறது. வன்முறை அரசியலும் அகதி வாழ்வும் மக்;களை விரக்தியின் விளிம்புக்கு தள்ளிக் கொண்டு செல்கிறது. ஆகவே அரசு கிழக்கை விடுவித்தாகிவிட்டது ஜனநாயகம் பூத்துக் குலுங்குகிறது என்று கும்மளாம் அடிப்பதை நிறுத்தி மக்களின் நாளாந்த வாழ்வில் முன்னேற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.
மே10, 2008 கிழக்கு தேர்தல் முடிவுகள்:
அம்பாறையில் ஆளும் கூட்டணி பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றுள்ளது:
கிழக்கிலங்கையில் சனத்தொகை அதிகமான அம்பாறையில் 14 மாகாண சபை உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 11 அரசியல் கட்சிகளையும் 22 சுயேச்சைக்குழுக்களையும் சேர்ந்த 561 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதனால் தான் இலங்கைத் தேர்தல் வரலாற்றிலேயே முதல் தடவையாக மிக நீளமான வாக்குச் சீட்டு பயன்படுத்தப்பட்டது. 409,000 வாக்காளர்களில் 293,000 வாக்காளர்கள் வாக்களித்திருந்தனர். இதில் 53 வீதமான வாக்குகளை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பெற்றுள்ளது. 44.5 விதமான வாக்குகளை மட்டுமே இரண்டாவதாக வந்த ஐக்கிய தேசியக் கட்சிக் கூட்டணி பெற்றுள்ளது.
593000 சனத்தொகையுடைய அம்பாறையில் முஸ்லீம் மக்கள் 41.2 வீதமாக பெரும்பான்மையினராக உள்ளனர். இலங்கையில் முஸ்லீம்கள் பெரும்பான்மையாக உள்ள ஒரே மாவட்டம் அம்பாறை. இங்கு தமிழ் மக்கள் மூன்றாவது சிறுபான்மையினராக 18.2 வீதத்தினரே உள்ளனர். சிங்களவர்கள் 38.8 வீதமாகவும் உள்ளனர். கிழக்கில் சனத்தொகை கூடிய மாவட்டம் அம்பாறை.
சம்மாந்துறை, அம்பாறை, கல்முனை, பொத்துவில் ஆகிய நான்கு தேர்தல் தொகுதிகiயுடைய அம்பாறை மாவட்டத்தில் கல்முனைத் தேர்தல் தொகுதியில் மட்டும் ஐக்கிய தேசியக் கட்சி பெரும்பான்மை வாக்குகளை வென்றது. ஏனைய மூன்று தொகுதிகளிலும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றது.
அம்பாறை:
சம்மாந்துறை தேர்தல் தொகுதி:
UPFA 24119 52.22%
UNP 21401 46.34%
JVP 179 0.39%
UNA 75 0.16%
USP 69 0.15%
NSU 8 0.02%
PFLT 8 0.02%
அம்பாறை தேர்தல் தொகுதி:
UPFA 47319 57.1%
UNP 31386 37.87 %
JVP 3693 4.46%
NSU 215 0.26%
UNA 71 0.09%
USP 55 0.07%
PFLT 8 0.01%
கல்முனை தேர்தல் தொகுதி:
UNP 27596 66.46%
UPFA 13468 32.44%
UNA 174 0.42%
USP 69 0.17%
JVP 30 0.07%
PFLT 15 0.04%
பொத்துவில் தேர்தல் தொகுதி:
UPFA 54619 58.56%
UNP 37488 40.19%
JVP 490 0.53%
UNA 270 0.29%
USP 98 0.11%
PFLT 27 0.03%
திருமலையில் யுஎன்பி - முஸ்லீம் காங்கிரஸ் கூட்டு பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றுள்ளது:
திருகோணமலையில் 10 உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்காக 12 அரசியல் கட்சிகளையும் 19 சுயேச்சைக்குழுக்களையும் சேர்ந்த 403 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 242,000 வாக்காளர்களில் 151,000 வாக்காளர்கள் வாக்களித்திருந்தனர். இதில் 43.0 வீதமான வாக்குகளையே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பெற்றுள்ளது. 51.4 விதமான வாக்குகளைப் பெற்று ஐக்கிய தேசியக்கட்சி - முஸ்லீம் காங்கிரஸ் கூட்டு முன்னணியில் உள்ளது.
340000 சனத்தொகையுடைய திருகோணமலை, கிழக்கில் தமிழ் மக்கள் அதிகமாக வாழும் இரண்டாவது மாவட்டம். இங்கு 48.2 வீதமான தமிழர்கள் வாழ்கின்றனர். முஸ்லீம்கள் 28.2 வீதமாகவும் சிங்களவர்கள் 23.4 வீதமாகவும் உள்ளனர். கிழக்கில் சனத்தொகை குறைந்த மாவட்டமாக திருகோணமலை உள்ளது.
இங்கு சிங்கள மக்கள் செறிந்து வாழும் சேருவில தேர்தல் தொகுதியில் மட்டும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 61.4 வீதமான வாக்குகளைப் பெற்றுள்ளது. ஆனால் முஸ்லீம் மக்கள் செறிந்து வாழும் மூதூர் தொகுதியிலும் தமிழ் மக்கள் செறிந்து வாழும் திருகோணமலை நகரத் தேர்தல் தொகுதியிலும் ஐக்கிய தேதியக் கட்சி - முஸ்லிம் காங்கிரஸ் கூட்டு வெற்றி பெற்றுள்ளது. திருகோணமலை நகரத் தொகுதி வழமையாகவே ஐக்கிய தேசியக் கட்சிக்கு சார்பான ஒரு தொகுதியாகவே இருந்து வருகிறது. மேலும் கிழக்கிலங்கை என்ற கோசத்துடன் திருகோணமலைத் தமிழர்கள் தங்களை அடையாளப்படுத்துவதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
திருகோணமலையில் EPDP, TDNA ஆகிய கட்சிகளின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டதால் அக்கட்சிகள் போட்டியிடவில்லை.
திருகோணமலை :
சேருவில தேர்தல் தொகுதி:
UPFA 21915 61.47%
UNP 10855 30.45%
JVP 2286 6.41%
USP 249 0.7%
EDF 125 0.35%
AITUF 9 0.03%
PFLT 7 0.02%
திருகோணமலை தேர்தல் தொகுதி:
UNP 28146 62.26%
UPFA 13828 30.59%
JVP 1408 3.11%
USP 537 1.19%
AITUF 311 0.69%
EDF 195 0.43%
PFLT 117 0.26%
மூதூர் தேர்தல் தொகுதி:
UNP 28233 59.08%
UPFA 18451 38.61%
USP 495 1.04%
JVP 160 0.33%
EDF 124 0.26%
AITUF 25 0.05%
PFLT 25 0.05%
மட்டு வில் ஆளும் கூட்டணியில் போட்டியிட்ட ரிஎம்விபி பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றுள்ளது:
மட்டக்களப்பு, பட்டிருப்பு, கல்குடா ஆகிய தேர்தல் தொகுதிகளைக் கொண்ட மட்டக்களப்பு மாவட்டத்தில ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றுள்ளது. மட்டக்களப்பில் 11 ஆசனங்களைப் பெறுவதற்கான இத்தேர்தலில் 12 அரசியல் கட்சிகளையும் 15 சுயேச்சைக்குழுக்களையும் சேர்ந்த 378 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 331,000 வாக்காளர்களில் 202,000 வாக்காளர்கள் வாக்களித்திருந்தனர். இதில் 58 வீதமான வாக்குகளை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பெற்றுள்ளது. 32.3 விதமான வாக்குகளை மட்டுமே இரண்டாவதாக வந்த ஐக்கிய தேசியக்கட்சிக் கூட்டணி பெற்றுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் முஸ்லீம் காங்கிரஸ் பிரதானமாகப் போட்டியிட்டது.
486000 சனத்தொகையுடைய மட்டக்களப்பில் 74.3 வீதம் தமிழர்கள், 23.4 வீதம் முஸ்லீம்கள் 1.4 வீதம் சிங்களவர்கள் ஆவர். கிழக்கில் தமிழ் மக்கள் மிகப்பெரும்பான்மையாக உள்ள மாவட்டம் மட்டக்களப்பு அதையடுத்து திருகோணமலை. அங்கு 48.2 வீதமான தமிழர்கள் வாழ்கின்றனர். கிழக்கு மாகாணத்தின் மொத்த சனத்தொகையில் தமிழர்கள் 44.7 வீதமாக உள்ளனர். அதனைத் தொடர்ந்து முஸ்லீம்கள் 32.4 வீதமாக உள்ளனர். சிங்களவர்கள் 23 விதத்தினர்.
மட்டக்களப்பு:
மட்டக்களப்பு தேர்தல் தொகுதி:
UPFA 52053 58.78%
UNP 29770 33.62%
TDNA 3222 3.64%
EPDP 1199 1.35%
EDF 1118 1.26%
USP 386 0.44%
JVP 218 0.25%
PFLT 73 0.08%
பட்டிருப்பு தேர்தல் தொகுதி:
UPFA 14379 42.89%
UNP 11829 35.28 %
TDNA 3594 10.72%
EPDP 2612 7.29%
EDF 509 1.52%
USP 268 0.8%
PFLT 57 0.17%
JVP 37 0.11%
கல்குடா தேர்தல் தொகுதி:
UPFA 36731 66.81%
UNP 15673 28.51%
EPDP 1421 2.58$
TDNA 443 0.81%
USP 284 0.52%
EDF 111 0.2%
JVP 97 0.18%
PFLT 17 0.03%
தபால் வாக்குகளில் 56 வீதமான வாக்குகளை ஆளும் கூட்டணி பெற்றுள்ளது:
மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மாவட்டத்தின் தபால் மூல வாக்குகள் வெளியாகி உள்ளது. மட்டக்களப்பில் 2159 வாக்குகளைப் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பெற்றுள்ளது. மொத்தமாக செலுத்தப்பட்ட வாக்குளில் இது 51.7 வீதம். ஆதே போல் அம்பாறை மாவட்டத்தில் செலுத்தப்பட்ட தபால் வாக்குகளில் 4722 வாக்குகளை ஆளும் கூட்டணி பெற்றுள்ளது. செலுத்தப்பட்ட வாக்குகளில் இது 55.2 வீதம். திருகோணமலை மாவட்டத்தில் 62 வீதத்திற்கும் சற்று அதிகமாக 4938 வாக்குகளை ஆளும் கூட்டணி பெற்றுள்ளது.
திருகோணமலை தபால் வாக்கு முடிவுகள்:
UPFA 4938 62.17%
UNP 2481 31.24%
JVP 411 5.17%
AITUF 33 0.42%
USP 18 0.23%
EDF 13 0.16%
PFLT 10 0.13%
அம்பாறை தபால் வாக்கு முடிவுகள்:
UPFA 4722 55.24%
UNP 3401 39.79%
JVP 353 4.13%
NSU 27 0.32%
AIG22 12 0.14%
UNA 7 0.08%
USP 5 0.06%
PFLT 5 0.06%
மட்டு தபால் வாக்கு முடிவுகள்:
UPFA 2159 51.72%
UNP 1282 30.71%
TDNA 454 10.88%
EPDP 135 3.23%
EDF 78 1.87%
JVP 26 0.62%
PFLT 10 0.24%
USP 5 0.12 %
United People`s Freedom Alliance – UPFA
United National Party - UNP
Tamizh Democratic National Alliance - TDNA
Eelam People’s Democratic Party - EPDP
Eelavar Democratic Front - EDF
People`s Liberation Front - JVP
People`s Front of Liberation Tigers - PFLT
Nawa Sihala Urumaya - NSU
Independent Group 22 - AIG22
United National Alliance - UNA
United Socialist Party - USP
Akila Ilankai Tamil United Front - AITUF
No comments:
Post a Comment