Wednesday, May 7, 2008

”இலங்கைத் தீவிலிருந்து பிரபா குழுவினர் முழுமையாக துடைத்தெறியப்படும் நாளன்று எமது ஆயுதப் பிரிவு கலைக்கப்படும்.” பிள்ளையான் - நேர்காணல்

TMVP Pillayan“பிரபாகரன் குழுவிடமிருந்து எங்களையும், கிழக்கு மாகாணத்தில் வாழும் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களையும் பாதுகாப்பதற்காகவே நாங்கள் ஆயுதம் வைத்திருக்கின்றோம். எங்கள் துப்பாக்கிகள் பொதுமக்களை அச்சுறுத்துவதற்காகவல்ல. இலங்கைத் தீவிலிருந்து பிரபாகரன் குழுவினர் முழுமையாகத் துடைத்தெறியப்படும் நாளன்று எமது ஆயுதப் பிரிவு கலைக்கப்படும். ஆயுதங்கள் அரசிடம் ஒப்படைக்கப்படும்.” தினகரன் பத்திரிகையில் 2008.05.04ஆந் திகதி பிரசுரமாகியிருந்த பேட்டியொன்றிலே பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் மேற்கண்டவாறு கூறியிருக்கிறார். இப்பேட்டியின் சுருக்கம் கீழே சுருக்கமாகத் தொகுத்துத் தரப்பட்டுள்ளது.

SLMC Leader Rauff Hakeemகேள்வி: தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பு முஸ்லிம் விரோத பின்னணியைக் கொண்டது என்று முஸ்லிம் காங்கிரஸ் முன்வைக்கும் குற்றச்சாட்டு பற்றி உங்கள் கருத்து என்ன?

பிள்ளையான்: பிரபாகரனின் தலைமையில் இயங்கும் எல்.ரி.ரி..ஈ. எனப்படுகின்ற அமைப்பானது முஸ்லிம் விரோத பின்னணி கொண்டது என்பதற்காக அதிலிருந்து பிளவுபட்டு உருவாகிய எம்மையும் அதே பார்வையில் பார்ப்பது என்பது பிழையான நோக்காகும். காரணம் ஒரு அமைப்பிலிருந்து பிரிந்து இன்னுமொரு அமைப்பு உருவாவது என்பதற்கு கொள்கை வேறுபாடுகளே காரணமாகும். நாங்கள் எல்.ரி.ரி.ஈ. இன் உருமாற்றல்ல. அதிலிருந்து பிளவுபட்டவர்கள். எல்.ரி.ரி.ஈ. இன் போக்கிலிருந்து பிரிந்து வேறு திசை திரும்பியவர்கள். எல்.ரி.ரி.ஈ. இன் பாஸிச அடையாளங்களை எம்மிடமிருந்து துடைத்தெறிந்தவர்கள்.

அத்தோடு, எல்.ரி.ரி.ஈ. ஆனது யாழ்ப்பாணத்தில் உருவாகி வந்த தனி தமிழ் கோ~ங்களின் இராணுவ வடிவமாகும். யுதார்த்த சூழலில் இந்த தனி தமிழ் கோ~மானது தமிழர்களின் மத அடையாளமாக சைவர்களை மட்டுமே கருத்திற் கொண்டது. இதிலிருந்துதான் எல்.ரி.ரி.ஈ. யிடம் முஸ்லிம்களை ஒரு அரைத் தமிழர்களாக பார்க்கின்ற பார்வையும் முஸ்லிம்கள் மீதான விரோதமும் உருவானது.

ஆனால், நாம் தமிழீழ கோஸத்தை கைவிட்டிருக்கின்றோம். குறிப்பாக கிழக்கு மண்ணில் தனி தமிழ் கோஸமோ, தனி முஸ்லிம் கோஸமோ பொருத்தப்பாடற்றது என தெளிவடைந்திருக்கின்றோம். கிழக்கு மாகாணத்தின் வளர்ச்சிக்கும், அமைதியான எதிர்காலத்திற்கும் தமிழ், முஸ்லிம், சிங்கள, பறங்கிய மக்களிடையேயான ஐக்கியமே முன் நிபந்தனை என்பதை அனுபவ ரீதியாக கண்டறிந்துள்ளோம். ஆகவேதான் கிழக்கு மண்ணின் பல்லின கலாசாரத்தை எமது ரி.எம்.வி.பி. பகிரங்கமாக அங்கீகிரிக்கிறது. எமது பார்வை இப்படியிருக்க நாம் முஸ்லிம் விரோத பின்னணியை கொண்டவர் என்பது அபத்தம்.

கேள்வி: தமிழ் அமைப்புக்களும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் உங்களை ஆயுதக் குழு என முன்வைக்கும் குற்றச்சாட்டு பற்றி?

Pillayan TMVPபிள்ளையான்: கிழக்கு மாகாணம் ஆனது பிரதேச ரீதியில் தமிழ் தலைவர்களால் இரண்டாம் பட்சமாக்கப்படுகின்றது என்ற அதிருப்தியிலிருந்து உருவானதே ரி.எம்.வி.பி. என்பதை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். இந்நிலையில் எமது வரவை கிழக்கு மாகாண மக்கள் பெருவாரியாக வரவேற்கின்றார்கள் என்பதன் அடையாளமே கடந்த உள்@ராட்சித் தேர்தலில் எமக்கு அளிக்கப்பட்ட அமோக வெற்றியாகும். இந்த அங்கீகாரம் ஆனது இதுவரை காலமும் இருந்த அனைத்துவித அரசியற் கட்சிகளுக்கும் அவர்களின் கொள்கைகளுக்கும் ஏற்பட்ட பாரிய தோல்வியாகும்.

உங்களுக்குத் தெரியும். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இதுவரை காலமும் இருந்த வந்த தமிழ் காங்கிரஸ், தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, PLOTE, EPRLF, TELO, LTTE என்று எந்த அமைப்பை எடுத்துக் கொண்டாலும் அவற்றின் உருவாக்கமும், தலைமையும் வடக்கிலேயே மையம் கொண்டிருந்தது. ஆனால், வரலாற்றிலேயே முதல் தடவையாக இதில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது ரி.எம்.வி.பி.யின் வரவாகும். இதை அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

கேள்வி: நீண்ட காலமாக தமிழீழம் என்ற நிலைப்பாட்டில் இருந்த நீங்கள் உங்கள் இன்றைய நிலைப்பாட்டை எடுப்பதற்கு உங்களைத் தூண்டிய காரணிகள் யாவை?

Pillayan_Groupபிள்ளையான்: தமிழீழம் எனும் அழகான கற்பனையில் மயங்கியிருந்தோம் என்று நான் ஒப்புக் கொள்வதற்கு வெட்கப்படவில்லை. நீங்கள் குறிப்பிட்டதைப் போன்று அதற்காக நாங்கள் செய்த தியாகங்கள் எண்ணிலடங்காதவை. 2002ஆம் ஆண்டு சமாதான உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்ட போது எமது அமைப்பு சாதித்திருந்த இராணுவ ரீதியிலான வெற்றிகளை எமது மக்களுக்கு வேண்டிய அரசியல் பலமாக மாற்றக்கூடிய அரியதொரு வாய்ப்பு எமக்குக் கிடைத்தது. இது பற்றிய எதிர்பார்ப்பு எமது மக்களிடம் பாரிய அளவில் எழுந்திருந்தது. போரின் இடிபாடுகளுக்குள்ளிருந்து ஒரு வெளிச்சம் தெரியாதா என்று எமது மக்கள் சுமார் 20 வருட காலம் ஏங்கிக் கிடந்தார்கள்.

கொடிய யுத்தத்தாலும், அழிவுகளாலும் தமிழ் மக்கள் மிகவும் பலவீனமான ஒரு சமூகமாக சீரழிந்து கிடந்தார்கள். காடுகளுக்குள் இருந்த நாம் மக்களின் நிலைமைகளையும், விருப்பங்களையும் நேரடியாக கண்டுகொள்ள சமாதான காலம் எமக்கு வாய்ப்பளித்தது. ஆனால், புலிகளின் தலைவர்களான பிரபாகரனும், பொட்டம்மானும் ஒரு போதும் வெளியே வரவில்லை. மக்களின் மனவிருப்பங்கள் என்னவென்பதை புரிந்து கொள்ள அவர்கள் மறுத்தனர். எமது தலைவர் கருணா அம்மான் அவர்களை பேச்சுவார்த்தையில் ஈடுபடுத்திக் கொண்டே மறுபுறம் யுத்த தயாரிப்பில் முனைப்பு கொள்ளுமாறு அவருக்கு கட்டளையிடப்பட்டது.

குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் மென்மேலும் ஆயிரக்கணக்கான இளைஞர்களை ஆயுதப் போராட்டத்திற்கு தயார்படுத்த நாம் பணிக்கப்பட்டோம். ஆனால், எம்மால் அதனை செய்ய முடியவில்லை. எமது மக்களின் வெறுப்புகளுக்கு நாம் ஆளாக வேண்டியிருந்தது. வட மாகாணத்து இளைஞர்கள் எல்லாம் ஒருபுறம் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லும் வாய்ப்புக்கள் இருந்தது. மறுபுறம் பிரபாகரனின் வெற்றிற்கு கிழக்கு மாகாண இளையோர் பட்டாளம் கூலிப்படையாக, கூலி கூட இல்லை. அடிமை வீரர்களாக பலியிடப்பட்டுக் கொண்டிருந்தார்கள். இதனையிட்டு எமது பிரதேச மக்களும், புத்திஜீவிகளும் எம் மீது கடும் அதிருப்தி கொள்ள நேரிட்டது. இது போன்ற இன்னும் பல காரணங்களே எம்மை பிரபாகரனின் தலைமையை வெறுக்க செய்தது. இயக்கத்தை பிரிந்து சுமார் ஆறாயிரம் இளைஞர்கள், யுவதிகளை ஆயுதங்களை கைவிடச் செய்தது. எங்களை அமைதியையும், அபிவிருத்தியையும் நோக்கி பயணிக்கச் செய்தது. இன்று ஜனநாயக நீரோட்டத்தில் கலந்து கொள்ளச் செய்துள்ளது.

கேள்வி: அரசாங்க வேட்பாளர் பட்டியலில் ஆயுதக் குழுவொன்று போட்டியிடுவதால் இத்தேர்தல் நீதியான தேர்தலாக இருக்காது என்று ஐக்கிய தேசியக் கட்சி நாடு முழுவதும் கூறிவருகின்றது. இது பற்றிய உங்கள் அபிப்பிராயம் என்ன? தேர்தல் நீதியாக நடைபெறும் என்பதை உறுதிப்படுத்துவீர்களா?

TMVP Logoபிள்ளையான்: உள்@ராட்சித் தேர்தலுக்கு முன்பும் இது போன்ற சந்தேகங்கள் எழுப்பப்பட்டது. சிலவேளை ரி.எம்.வி.பி. ஆனது ஒரு ஆயுதம் தாங்கிய படைப் பிரிவையும் வைத்துக் கொண்டு அரசியல் கட்சியாக செயற்படுவதிலிருந்து இவ்வச்சங்கள் எழுந்ததில் சில நியாயங்கள் இருக்கலாம். நாங்கள் ஆயுதங்களை வைத்திருப்பது பிரபா குழுவிடமிருந்து எம்மை மட்டுமல்ல, எமது மக்களையும் பாதுகாக்கத்தான். எமது மக்கள் எனும் போது கிழக்கில் வாழ்கின்ற தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களையும் பாதுகாக்கத்தான். மாறாக எமது துப்பாக்கிகள் பொதுமக்கள் யாரையும் அச்சுறுத்துவதற்காக அல்ல.

அது மட்டுமல்ல, இப்போது அரச படைகள் கிழக்கினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள நிலையில் எமது படைப் பிரிவுகள் முற்றாக முடக்கப்பட்டுள்ளன. இலங்கைத் தீவிலிருந்து பிரபா குழுவினர் முழுமையாக துடைத்தெறியப்படும் நாளன்று எமது ஆயுதப் பிரிவு கலைக்கப்படும். ஆயுதங்கள் அரசிடம் ஒப்படைக்கப்படும். அதுவரை எமது பேராளிகளும், ஆயுதங்களும் உறங்கு நிலையிலிருக்கும்.

கேள்வி: கருணா குழு முஸ்லிம் மக்களிடம் கப்பம் வாங்கி அவர்களைத் துன்புறுத்தியது என்றும் அத்தகையோரை பதவியில் அமர்த்துவதா என்றும் முஸ்லிம் காங்கிரஸ் பிரசாரம் செய்கிறது. இது பற்றி என்ன கூறுகிறீர்கள்?

பிள்ளையான்: 2004ஆம் ஆண்டு எல்.ரி.ரி.ஈ.யிலிருந்து பிரிந்து நாங்கள் ஜனநயாக வழிக்கு வந்தபோது சுமார் 6000 போராளிகள் எங்களிடம் இருந்தனர். அவ்வேளை வன்னியிலிருந்து எங்கள் மீது படையெடுப்பு நடந்தது. அவ்வேளை ஏற்பட்ட கலவர சூழலில் பல இடங்களில் ஆயுதங்கள் புதைக்கப்பட்டன. சில வேளைகளில் சில விசமிகளின் கரங்களிலும் இவ்வாயுதங்கள் அகப்பட்டன. இந்நிலையில் கிழக்கில் மட்டுமல்ல, இலங்கையின் ஏனைய பாகங்களிலும் சில கடத்தல்கள், கப்பங்கள் நடத்தப்பட்டன.

இவையனைத்தையும் எல்லோரும் சேர்ந்து எங்கள் தலையில் போட்டார்கள். சில இடங்களில் தமிழ், முஸ்லிம் மக்களிடையே ஒரு கலவர சூழலை ஏற்படுத்தி அதில் குளிர்காய்வதற்காக பிரபா குழு உறுப்பினர்கள் இதனை திட்டமிட்டுச் செய்தனர். ஆனால், இப்போது எந்தவொரு சம்பவங்களும் இல்லை. கிழக்கில் நாங்கள் கால் பதித்ததிலிருந்து எந்தச் சம்பவங்களும் இல்லை. இயல்பு நிலை வழமைக்கு திரும்பியுள்ளது. எங்களைப் பொறுத்தவரை முஸ்லிம்களிடமல்ல தமிழர்களிடம் கூட நாங்கள் கப்பம் பெறுவதில்லை.

கேள்வி: எல்.ரி.ரி.ஈ. அதற்கு முன் தமிழ் மிதவாதத் தலைவர்களும் இலங்கையில் இனப்பிரச்சினை இருக்கின்றது என்ற அடிப்படையிலேயே செயற்பட்டிருக்கின்றார்கள். இன்றும் இனப்பிரச்சினை நீங்கள் முன்வைக்கும் தீர்வு என்ன?

பிள்ளையான்: முதல்படியாக நாம் இன்றுள்ள மாகாண சபைகளை ஏற்றுக்கொண்டு கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுகின்றோம். அதில் வெற்றிபெற்று ஆட்சியமைப்போம். ஆதற்கூடாக பல வேலைத்திட்டங்களை மக்களுக்கு செய்வோம். இனப் பிரச்சினைக்கான தீர்வுத் திட்டத்தினை தேர்தல் முடிந்த பிற்பாடு நடைபெறவிருக்கும் சர்வகட்சி மாநாடொன்றில் முன்வைப்பதாக உள்ளோம். இதில் மாகாண சபையைவிட கூடிய அதிகாரங்களைக் கொண்ட ஏற்பாடுகள் அடங்கியிருக்கும்.

No comments: