Wednesday, May 28, 2008

முஸ்லிம்களிடையே பிரிவினைவாதமோ பயங்க்ரவாதமோ இல்லை

83 கறுப்பு ஜுலைக்கான காரணம் எல்.ரி.ரி.ஈ.யின் போபோ பிராவோ தாக்குதல் மூலம் இலங்கை இராணுவத்தின் 13 உறுப்பினர்களை கொன்றமையாகும். இருப்பினும் அக்காலப் பகுதியில் இந்நாட்டு அரசியலில் மற்றும் சிவில் சமூகத்தின் மத்தியில் நிலவிய இனவாத போக்கு இல்லாமலிருந்தால் கறுப்பு ஜலையை நிச்சயம் தடுத்திருக்க முடியும்.

அமைச்சர் சிறில் மெதிவ் உட்பட அரச தரப்பிலும் எதிர்தரப்பு அரசியல்வாதிகளும் மற்றும் புத்தஜீவிகள் சிலரும் இந்த சிங்கள இனவாதத்துக்கு உயிர் ஊட்டினர். ஆயுதம் தாங்கி பிரிவினைவாதத்துக்கு துணைபோன தமிழர்களுக்கும் ஜனநாயக தமிழர்களுக்கும் இடையிலான வேறுபாட்டையும் ஒன்றுபடுத்தி இவர்கள் அனைவரும் சிங்கள இனத்துக்கு துரோகம் இழைக்கும் எதிரிகள் என்ற மனநிலையை தெற்கில் உருவாக்க இவர்கள் பாரிய பங்களிப்பை செய்தனர். புலிகள் இயக்கம் செய்த குற்றங்களுக்கு தெற்கில் நிராயுத அப்பாவி தமிழ் இனத்தவரை (குழந்தைகள், வயோதிபர்கள் உட்பட) பழிவாங்கும் நிலை உருவாகியது இவ்விதமே.

கறுப்பு ஜுலையில் சாதாரண தமிழ் மக்கள் துன்பங்களை அனுபவித்தனர். இருப்பினும் சிங்களவர்களுக்கு எந்த நன்மையும் கிடையாது. நன்மை கிடைத்தது புலிகளுக்கேயாகும். எல்.ரி.ரி.ஈ.யினர் சிறிய குழுவாக இருந்து உலகம் பூராகவும் விஸ்தரிக்கப்பட்டு பாரிய இயக்கமாக வளர்வதற்கு கறுப்பு ஜுலைதான் காரணம்.

கறுப்பு ஜுலைக்கு பல ஆண்டுகளுக்கு முன் தெற்கில் பரவியிருந்த இனவாத நோய்க்கு சமமான நோய் ஒன்றின் அறிகுறிகளை இப்போது காணமுடிகின்றது. கறுப்பு ஜுலைக்கு வழிவகுத்த வெறித்தனமான போக்கு தெற்கின் சமூகத்துக்குள் தானாகவே வரவில்லை. தமது பல்வேறுபட்ட தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காக இந்த நச்சுவிதையை திட்டமிட்டு சமூகத்துக்குள் வளர்ப்பதற்கு பிற்போக்குவாத சிங்கள அரசியல்வாதிகள் மற்றும் புத்திஜீவிகளால் முடிந்தது. அவ்வாறான நச்சுவிதை விதைப்பில் அவசரமாக ஈடுபட்டுள்ளதை காணக்கூடியதாக உள்ளது. இதில் ஈடுபடுவது ஜாதிக ஹெல உறுமயவாகும். அவர்களின் விளைச்சல் நிலம் கிழக்கு மாகாணமாகும். நச்சுவிதை முஸ்லிம் அச்சம்.

பல்வேறுபட்ட அரசியல் மற்றும் கருத்துக்களின் நிலைப்பாட்டுக்கு இடையிலான வேறுபாட்டை காணாததும் மற்றும் கவனத்தில் எடுத்துக் கொள்ளாததும் பிற்போக்குவாதிகளின் விசேட அம்சமாகும். புலிகளின் நடவடிக்கை இதற்கு நல்லதோர் உதாரணமாகும். புலிகளின் உலகத்தில் எதிரி அல்லது நண்பன் என்ற வேறுபாடு இல்லை. அவர்களின் நோக்கத்துக்கு அமைய தமக்கு எதிரான கருத்தை கொண்டிருப்பவர்கள் அனைவரும் தமது எதிரிகளேயாகும். எல்.ரி.ரி.ஈ.னரின் இந்த பிற்போக்குவாதத்தின் புதிய வெளியீடு கடந்த வாரத்தில் இடம்பெற்ற மகேஸ்வரி வேலாயுதத்தின் கொலையாகும்.

Maheswari Velayuthamவேலாயுதம் ஈ.பி.டி.பி. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசகராகவும் இருந்துள்ளார். அதனோடு அவர் மனித உரிமை செயற்பாட்டாளராகவும் இருந்தார். மனித உரிமைக்கு உள்ளானவர் எவராக இருந்தாலும் அரசியல் வேறுபாடின்றி எதிரி நண்பன் என்று பாராது உதவுவது அவரின் பழக்கமாகும். அதேபோன்று அவர் நிராயுத அரசியல் செயற்பாட்டாளராகவும் திகழ்ந்தார். இந்த வேறுபாடு எதுவும் புலிகளுக்கு அவசியமாக இருக்கவில்லை. தமது நம்பிக்கைக்கு அமைய அரசியலில் ஈடுபடும் உரிமை வேலாயுதத்துக்கு இருப்பதை புலிகள் ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால் அவர்கள் நோயுற்று படுக்கையில் இருந்த தனது தாயை பார்க்க யாழ்ப்பாணம் சென்ற திருமதி வேலாயுதத்தை கொலை செய்தனர்.

பிற்போக்குவாதிகள் கவனத்தில் எடுக்காதது நல்லது கெட்டதுமல்ல. பிற்போக்கு உத்திகள் துரோக நோக்கத்துடன் மட்டுமன்றி சுய அழிவுக்கு வழிவகுக்கும். இன்று உலகத்தில் அனேகமான நாடுகள் எல்.ரி.ரி.ஈ. இயக்கத்தை தடை செய்திருப்பது புலிகளின் பிற்போக்குவாத செயல்பாட்டின் காரணமாகவேதான். சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் சமமாக வாழும் கிழக்கு மாகாணத்தில் சமாதானத்தை காப்பாற்றுவதற்கு இந்த மூவினத்துக்கிடையில் நல்லெண்ணத்தை கட்டியெழுப்ப வேண்டும். கிழக்கில் எந்தவொரு இடத்திலாவது இன மோதல் ஒன்று ஏற்பட்டால் அது முழு மாகாணத்தையும் தீக்கிரையாக்க வழிவகுக்கும். ஜாதிக ஹெல உறுமய தற்போது மிக ஆர்வத்துடன் நடைமுறைப்படுத்தும் முஸ்லிம் விரோத சொற்போரை நாம் இந்த கண்ணோட்டத்துடனே பார்க்க வேண்டியுள்ளது.

JHUஜாதிக ஹெல உறுமய இல்லாத ஒருநோயை உருவாக்கி அதைக் குணப்படுத்த முன்வருகின்றது. அவர்கள் முஸ்லிம் பயங்கரவாதத்தை பற்றி முஸ்லிம் பிரிவினைவாதத்தை பற்றி பேசுகின்றனர். இந்நாட்டில் எந்தவொரு முஸ்லிம் தலைவரும் பிரிவினை வாதத்தை பற்றி பேசுவதில்லை. இவர்களில் ஒரு சிலர் முஸ்லிம்கள் பெரும்பாலும் வாழும் மாவட்டத்துக்கு தனியான நிர்வாக அலகொன்றை கோரியிருக்கலாம். இது ஒன்றும் பிரிவினைவாதமல்ல. அதிகார பரவலாக்கலாகும்.

கிழக்கில் ஒரு சில பகுதிகளில் முஸ்லிம் இளைஞர்கள் சில சிறிய ஆயுதங்களை வைத்திருந்தாலும் அது இலங்கை அரசுக்கு எதிராக அல்ல. புலிகளின் அச்சுறுத்தலில் இருந்து தமது கிராம மக்களை பாதுகாத்துக் கொள்வதற்காகும். உண்மை என்னவென்றால் முஸ்லிம் பிரிவினை வாதமோ அல்லது முஸ்லிம் பயங்கரவாதமோ இதுவரை இந்த நாட்டில் இல்லை. இல்லாத அச்சுறுத்தல்கள் இடையூறுகளை காண்பது பிற்போக்குவாத கருத்துக்களுடையவர்களின் பிரதான குணாதிசயங்களாகும்.

உதாரணமாக அமெரிக்காவில் சில பிற்போக்குவாத கிறிஸ்தவ பிரிவுகளின் நடத்தையை எடுத்துக் காட்டலாம். அவர்களின் முறுமுறுப்பு மற்றும் ஜாதிக ஹெல உறுமயவின் கூற்றுக்கிடையில் மிக அபூர்வமான ஒற்றுமை நிலவுகின்றது. முஸ்லிம்கள் நஸரிஸ்தான் என்ற தனியான இராச்சியத்தை இலங்கையில் உருவாக்குவதற்கு உரித்தானதாக இருந்த அமெரிக்கன் பிராந்தியங்களில் அஸ்ட்லான் என்ற தனியான லத்தீன் இராஜ்யம் ஒன்றை உருவாக்குவதற்கு அமெரிக்காவில் வாழுகின்ற லத்தீனர்கள் சூழ்ச்சியொன்றை செய்தார்கள் என்கிறது.

சிங்கள பௌத்த தலைவர்களை நோய்க்குள்ளாக்கி கொலை செய்யும் கிறிஸ்தியானி சூழ்ச்சியொன்று இருப்பதாக ஒரு சில பிற்போக்குவாதிகள் கூறுகிறார்கள். அமெரிக்காவுக்கு தோல் நோய் (லாதுரு) பரப்பும் வெளிநாட்டு சூழ்ச்சியிருப்பதாக துரும்பையும் பெரும் மலையாக்கும் போக்கு உலகத்தின் அனைத்து பிற்போக்குவாதிகளுக்கும் பொதுவானது என்று இதன் மூலம் தெரிகின்றது.

சுனாமியால் பெரும் பாதிப்புக்குள்ளான பகுதி கிழக்கு மாகாணமாகும். விசேடமாக அங்கு வாழ்கின்றவர்கள் முஸ்லிம்களாகும். கிழக்கு மாகாணத்தின் சுனாமி அகதிகளாக இருப்பவர்களுக்கு இன்னும் நிரந்தர வீடுகள் இல்லை. இந்த அகதிகள் சிலருக்கு வீடுகள் நிரமாணிப்பதற்கு சவூதிஅரேபியாவில் உள்ள ரெட்கிரெசன்ட் அமைப்பின் உதவியில் ஹிங்குராணை சீனி தொழிற்சாலைக்கு சொந்தமான காணியில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்த திட்டத்துக்கு எதிராக ஜாதிக ஹெல உறுமய வழக்கு தாக்கல் செய்துள்ளது. இந்த வீடமைப்பு திட்டம் தீகவாபி புண்ணிய பூமிக்கு அருகாமையில் இருப்பதாகவும் இப்பிரதேசத்தில் சிங்கள பௌத்தர்களுக்கு வீடுகள் கிடைக்காததால் அவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டு உள்ளதாகவும் ஜாதிக ஹெல உறுமய வாதிக்கின்றது.

சிறில் மெதிவ் ஜே.ஆர். ஜயவர்தனவின் அமைச்சரவையில் அங்கம் வகித்துக் கொண்டுதான் நாடு பூராகவும் தமிழ் விரோத போக்கை விதைத்தார். அவரின் போக்கின் பயங்கர தன்மையை புரிந்துகொண்டதால்தான் அதன்பின் அதிகதாரத்துக்கு வந்த எந்த ஒரு அரசாங்கமும் இவ்வாறான சொற்பிரயோகங்களில் ஈடுபடுவதற்கு தமது அமைச்சர்களுக்கு இடம் கொடுக்கவில்லை.

President Mahinda Rajapaksaமஹிந்த ராஜபக்ஸவின் அரசின் கீழ் இந்த நிலை மாறியுள்ளது. முஸ்லிம் விரோத போக்கு மட்டுமல்ல. தமிழ் மற்றும் கிறிஸ்தவ விரோத சொற்பிரயோகங்களில் அடிக்கடி ஈடுபடும் சம்பிக்க ரணவக்க ராஜபக்ஸ பங்காளி கட்சியாகும். இதனால் இவர்களின் பிற்போக்குவாதத்தின் ஒரு பகுதி அரசு மீதும் ஜனாதிபதி மீதும் சுமத்தப்படுகின்றதை தவிர்க்க முடியாது. கறுப்பு ஜுலையை உருவாக்குவதற்கான பின்னணியை தயார் செய்வதற்கு அன்று ஜே.ஆர். ஜயவர்தன தமது அரசாங்கத்தின் சிலருக்கு வழிகொடுத்தார். அதன் பயங்கரத்தன்மையை உணரும்போது காலம் கடந்துவிட்டது. அன்று ஆரம்பித்த ஈழப்போர் இன்றும் முடியவில்லை. நாம் தற்போது தயாராகுவது இன்னுமோர் இனவாத யுத்தத்துக்கான பின்னணியை தயார் படுத்துவதற்காகவா?

(தமிழில் எஸ்.விஜயன். நன்றி : லக்பீம)

http://thesamnet.co.uk/?p=1227

No comments: